• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • `எலிதான் என்னை புலி ஆக்கப்போகுது’... எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்!

`எலிதான் என்னை புலி ஆக்கப்போகுது’... எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்!

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    `ஒரு நாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்தை 'மாயா', ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, “பல ‘புலி’களோட நடிச்ச என்ன ‘எலி’யோட நடிக்க வைச்சிருக்காங்க. ஆனால், உங்களுக்கு தெரியுமா இந்த ‘எலி’ தான் எதிர்காலத்தில் என்னை ஒரு ‘புலி’யா ஆக்கப் போகுது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில்” என்று தெரிவித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: