நடிகர் விஜயின் தந்தை, எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் திடீர் ராஜினாமா.. விஜய் தரப்பிலிருந்து நெருக்கடியா?

நடிகர் விஜயின் தந்தை, எஸ்.ஏ.சி கட்சியின் மாநிலத் தலைவர் திடீர் ராஜினாமா.. விஜய் தரப்பிலிருந்து நெருக்கடியா?

எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் (வலது) பத்மநாபன்

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்திருந்த கட்சியின் மாநிலத் தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

  • Share this:
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். கட்சியின் தலைவராக  பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா, பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

கட்சி குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களில், கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை. ரசிகர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், எனக்கு பிடித்த பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கியுள்ளேன். தற்போது விஜய் விஷ வலையில் சிக்கியுள்ளார் எனக் கூறினார்.

இதற்கிடையே  பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜயின் தாயார் ஷோபா பதவி விலகினார். கட்சியின் தலைவராக இருந்த ஆர்.கே.ராஜா மீது கடந்த வாரம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரியஸ் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜா மீது 2014-ஆம் ஆண்டு விற்ற  நிலத்திற்கு  பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜாவின் வழக்கறிஞர் கிஷோர் குமார் தெரிவித்தார்.இதையடுத்து ராஜா தலைமறைவானார். அவரது மனைவி, மைத்துனர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருக்கும் ராஜா, தான் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து நெருக்கடி தருவதாகவும், எனது உயிருக்கு ஏதேனும் ஆனால் அதற்கு விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும் படிக்க:  நடிகை குஷ்பு விபத்தில் சிக்கினார்.. முருகன் அருளால் உயிர் பிழைத்ததாக ட்வீட்..

இந்நிலையில் தற்போது பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: