கார்த்தியின் சர்தார் படத்திற்கு ரூ. 2 கோடியில் பிரமாண்ட அரங்கு...!

சர்தார் பட போஸ்டர்

கொரோனா அலை கைமீறிப்போய், ஊரடங்கும் அறிவித்துள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொசுவுக்கு பயந்த மனிதன் வலைக்குள் புகுந்து கொள்வது போல், கொரோனாவுக்கு பயந்த திரையுலகம் அரங்குக்குள் அடைக்கலம் தேடுகிறது. 

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக இந்தியாவை தாக்குகிறது. பணம் போட்டு படத்தை தொடங்கியவர்கள் படத்தை தொடரவும் வழியில்லை, நிறுத்தவும் வழியில்லை என்ற இக்கட்டில் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, அரங்கில் படப்பிடிப்பை தொடர்வது.

அண்ணாத்த படத்துக்கு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். விஜய் 65 படத்துக்கு சென்னையில் பிரமாண்ட அரங்கு தயாராகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்துக்கும் சென்னையில் 2 கோடி செலவில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்

Also read... ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் - ரிலீஸ் தேதிக்கு மே 20 வரை காத்திருங்கள்!

சர்தார் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இரும்புதிரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்குகிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். ஆக்ஷன் படமான இதற்கு சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.

அரங்கிற்குள் படப்பிடிப்பை அதிக ஆட்கள் இன்றி நடத்தலாம் என்பது திட்டம். ஆனால், கொரோனா அலை கைமீறிப்போய், ஊரடங்கும் அறிவித்துள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மே 24-க்குப் பிறகு அரசு ஊரடங்கை தளர்த்தினால், அரங்கில் படப்பிடிப்பை தொடர்வது என முடிவு செய்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: