ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் விருதை நெருங்கும் ஆர்ஆர்ஆர்.. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த RRR-ன் நாட்டு நாட்டு பாடல்!

ஆஸ்கர் விருதை நெருங்கும் ஆர்ஆர்ஆர்.. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த RRR-ன் நாட்டு நாட்டு பாடல்!

ஆர் ஆர் ஆர் பாடல்

ஆர் ஆர் ஆர் பாடல்

RRR Naatu Naatu : ஆஸ்கர் ரேஸில் பங்கேற்றுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகுபலி, பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு ஹீரோக்களான ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

ஆஸ்கார் 2023 விருதுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக இரண்டு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது. அதன்படி கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. விருதினை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார்.

இந்நிலையில் ஆஸ்கரின் இறுதிப்பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான 5 பாடல்களின் லிஸ்டில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை வெளியான அதிகாரப்பூர்வ லிஸ்டில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இடம்பிடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஆஸ்கர் ரேஸில் பங்கேற்றுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியுள்ளது. இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படவில்லை என்றாலும் பல பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Oscar Awards