அனிருத் குரலில் ஆக.1-ல் வெளியாகும் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் பாடல்

ஆர்ஆர்ஆர் பாடல் 

ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 1 ஆம் தேதி படக்குழு வெளியிடுகிறார்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகிறது.

  • Share this:
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 1 அன்று  வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் பாடலில் தமிழ்ப் பதிப்பை அனிருத் பாடியுள்ளார். 

பாகுபலி போலவே பிரமாண்டமாக தயாராகியுள்ளது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணியே இதற்கும் இசை. கீரவாணி என்றதும் யாரோ என்னவோ என திகைக்க வேண்டாம். பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த மரகதமணிதான் இவர். இங்கே மரகதமணி, தெலுங்கில் கீரவாணி. ராஜமௌலியின் நெருங்கிய உறவினர் இவர். சில தினங்கள் முன்பு சென்னை வந்து இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார் கீரவாணி, அப்போது அனிருத்தையும் சந்தித்தார்.ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 1 அன்று வெளியிடுகிறார்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகிறது. தமிழ்ப் பாடலை மதன் கார்க்கி எழுத அனிருத் பாடியுள்ளார்

Also Read : தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சத்யஜோதி பிலிம்ஸ்

திரையரங்குகள் எதிர்பார்த்தபடி ஆகஸ்டில் திறக்கப்பட்டால், கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி அக்டோபரில் ஆர்ஆர்ஆர் திரைக்கு வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: