Rajamouli : குறும்படம் இயக்கும் ராஜமௌலி...!

ராஜமௌலி

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெரிதினும் பெரிதுகேள் யாருக்கு பொருந்துமோ, ராஜமௌலிக்கு சாலப்பொருந்தும். படத்துக்குப் படம் பிரமாண்டத்தை ஏற்றிக் கொண்டே செல்கிறார்;. அவர் 'யு டர்ன்' அடித்து குறும்படம் இயக்குகிறார் என்றால், சிவலிங்கத்தை சுமந்த பாகுபலி சோப்பு டப்பாவுடன் போகிறாரா என்ற தொனியில் சந்தேகிக்கிறார்கள். ஆனால், உண்மை என்கின்றன தெலுங்கானாவிலிருந்து வரும் செய்திகள்.

ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருவதும், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் நாடறிந்த செய்தி. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் பட வேலைகளை தொடங்க மொத்த யூனிட்டும் தயாராக உள்ளது. திட்டமிட்டபடி அக்டோபரில் வர முடியவில்லை என்றாலும், அடுத்த வருடம் ஜனவரியில் படத்தை வெளியிடுவதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், இந்த பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும்விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளையும் இது சம்பந்தமாக சந்தித்துள்ளார்.

Also read... "இன்றைக்கு சிவராத்திரி தான்" மகளின் க்யூட் அடாவடிக்கு நகுல் ரிப்ளை!

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: