Home /News /entertainment /

நீங்க மாஸ் சார்! விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

நீங்க மாஸ் சார்! விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை அனைவரும் அறிவோம். 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் விக்னேஷ் சிவன்.

    2018 ஆம் ஆண்டு சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் தந்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைப்பெற்றது.மேலும் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான அந்தாலஜி திரைப்படமான பாவக் கதையில் ‘லவ் பண்ணா உட்றனும்’ என்ற படத்தை இயக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

    விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டுமில்லாமல், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


    விஜய் சேதுபதி பேசிய சில டையலாக்குகளை கோர்த்து இந்த வீடியோ உருவாக்குப்பட்டுள்ளது. நீங்க மாஸ் சார் என்றுக் கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.மேலும் இந்த ட்வீட்டை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor vijay sethupathi, Cinema

    அடுத்த செய்தி