ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலக அளவில் அங்கீகாரம்... பில்போர்ட் பட்டியலில் இணைந்த ரவுடி பேபி

உலக அளவில் அங்கீகாரம்... பில்போர்ட் பட்டியலில் இணைந்த ரவுடி பேபி

பில்போர்ட் பட்டியலில் ரவுடி பேபி பாடல்

பில்போர்ட் பட்டியலில் ரவுடி பேபி பாடல்

வை திஸ் கொலவெறி பாடலுக்குப் பின் மீண்டும் ஒரு வைரல் ஹிட் பாடலை தனுஷ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரவுடி பேபி பாடல் பில்போர்ட் என்ற சர்வதேச பாடல்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.

  பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது ஒவ்வொரு வாரத்திலும் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியலாகும். ரேடியோ ஸ்ட்ரீமிங், டிஜிட்டல் டவுன்லோடு என ஒவ்வொரு பிரிவிலும் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பில்போர்ட் வெளியிட்டிருக்கும் யூடியூப் பாடல்களின் தரவரிசையில் 4-வது இடத்தில் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது.

  மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

  அஜித் ஏன் பொதுவிழாக்களை தவிர்க்கிறார் - சிவா பதில்

  ஜனவரி 2-ம் தேதி யூடியூபில் வெளியான இந்தப் பாடலின் வீடியோ இதுவரை 8.5 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. விரைவில் 1 பில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வை திஸ் கொலவெறி பாடலுக்குப் பின் மீண்டும் ஒரு வைரல் ஹிட் பாடலை தனுஷ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  45 வருடங்களில் அதிகமாக வசூலித்த படம் இதுதான் - வெற்றி திரையரங்கம் பெருமிதம்

  ' isDesktop="true" id="96757" youtubeid="x6Q7c9RyMzk" category="entertainment">

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress sai pallavi, Dhanush, Rowdy Baby song