சிவகார்த்திகேயன் படத்தில் ‘ரோஜா’ சீரியல் நடிகை - நீங்க கவனிச்சீங்களா?

ரோஜா சீரியல் நடிகை

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ திரைப்படத்தில் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்த ஷாமிலி, ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரோஜா சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு 800வது எபிசோடை நிறைவு செய்த ரோஜா சீரியலில் சிபுசூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருக்கும் இந்த சிரியலில் ஷாமிலி குமார் பிரியா என்ற கதாப்பாத்திரத்தில் வில்லியாக நடித்து, கதிகலங்க வைத்தார். ஹீரோ, ஹீரோயினின் நடிப்பை விஞ்சும் அளவுக்கு ஷாமியிலியின் வில்லித்தனம் ரசிகர்களை பயங்கரமாக ரசிக்க வைத்தது. சன் தொலைக்காட்சியின் குடும்ப விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். இதனிடையே, மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்ற அவர், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இது குறித்து தன்னுடைய யூ டியூப் சேனலில் விளக்கம் கொடுத்த ஷாமிலி, தாய்மை அடைந்ததால் சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். இவருடைய கதாப்பாத்திரத்தில் சன் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக இருந்த அக்ஷையா நடித்து வருகிறார். சீரியலில் இருந்து விலகினாலும் ஷாமிலி குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இவர் ஏற்கனவே ரோஜா சீரியல் மட்டுமல்லாது வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல் மற்றும் வள்ளி மாப்பிள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Also read: லைகா தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய படம்..

மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிவ கார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ திரைப்படத்தில் அவர் மிகச்சிறிய ரோலில் நடித்திருக்கிறார். இந்த தகவல் பலருக்கும் தெரியாத நிலையில் மான் கராத்தே படத்தில் ஷாமிலி நடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.பெரிய படங்களில் எல்லாம் நடித்திருக்கிறாரா? ஷாமிலி என வாயைப் பிளக்கின்றனர். தற்போது சின்னத்திரைக்கு பிரேக் விட்டிருக்கும் ஷாமிலியும், குழந்தை பிறந்த பிறகு நிச்சயம் சீரியலுக்கு திரும்புவேன் எனக் கூறியுள்ளார்.

Also read: ஜப்பானில் வெளியானது ரஜினியின் தர்பார் - ரசிகர்கள் கொண்டாட்டம்

மேலும், யூ டியூப்பில் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றி வரும் அவர், தன்னுடைய ஒவ்வொரு அப்டேட்டுகளையும் சேனல் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். ரோஜா சீரியலில் கிடைத்த புகழலால், ஷாமிலி குறித்த தகவல்கள் அடிக்கடி உலா வந்து கொண்டே இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: