• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Metti Oli: மகளுடன் இருக்கும் மெட்டி ஒலி சரோ - இன்ஸ்டாவில் வைரலாகும் ஃபோட்டோ!

Metti Oli: மகளுடன் இருக்கும் மெட்டி ஒலி சரோ - இன்ஸ்டாவில் வைரலாகும் ஃபோட்டோ!

மெட்டி ஒலி சரோ

மெட்டி ஒலி சரோ

மெட்டிஒலி சரோவை அவ்வளவு எளிதில் சின்னத்திரை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

  • Share this:
சன் டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக இருந்து வருகிறது ரோஜா. இதில் கதாநாயகன் அர்ஜுனுக்கு (சிபு சூர்யன்) அம்மாவாக கல்பனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பணியாற்றி வருகிறார். சன் டிவி-யின் பிளாக் பஸ்டர் சீரியல்களில் ஒன்றான திருமுருகனின் "மெட்டி ஒலி"-யில் சரோ என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை பெற்றவர் இவர்.

மெட்டிஒலி சரோவை அவ்வளவு எளிதில் சின்னத்திரை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த சீரியலில் இவர் அனுபவித்த மாமியார் கொடுமைகள் பல பெண்களின் வாழ்க்கையில் நிஜத்திலேயே நடந்து கொண்டிருந்ததால் பல திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்களை ரசிகர்களாக பெற்றிருந்தார் மெட்டி ஒலி சரோ என்கிற காயத்ரி சாஸ்திரி. மெட்டி ஒலியில் நடிகர் சேத்தனின் மனைவியாக நடித்த நடிகை காயத்ரி சாஸ்திரியின் பூர்விகம் கர்நாடகா என்றாலும் அவர் மும்பையில் தான் பிறந்து, வளர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்ரியின் சகோதரரான சஞ்சய் ஒரு நடிகர். இவரை பார்க்க சென்னை வந்த காயத்திரிக்கு டைரக்டர் சுரேஷ் மேனன் வெள்ளித்திரை வாய்ப்பளிக்க நடிகர் அரவிந்தசாமி, நடிகை ரேவதி, நடிகர் அஜித் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான பாசமலர்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல்முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தல-தளபதி இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்திலும் நடித்தார். தொடர்ந்து சில திரைவாய்ப்புகள் வந்தாலும் சின்னத்திரையில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினர் காயத்ரி. 
View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)


லட்சியம், சாவித்திரி, குடும்பம் என தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் அமையவே சின்னத்திரையில் பிஸியான நடிகையானார். திருமுருகன் இயக்கத்தில் சில சீரியலிகளில் ஏற்கனவே காயத்ரி நடித்த போதும் மெட்டி ஒலி சீரியல் மூலமே தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார் நடிகை காயத்ரி சாஸ்திரி. தமிழக ரசிகர்கள் மனதில் மெட்டி ஒலி சரோவாக இடம் பிடித்த இவர், இந்திய டிவி ரசிகர்கள் மத்தியில் பார்வதியாக இடம் பிடித்தார்.

Also read... Yaaradi Nee Mohini: யாரடி நீ மோகினியின் 1200-வது எபிசோட் - கொண்டாடிய நட்சத்திரங்கள்! 
View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)


டிடி நேஷனலில் ஒளிபரப்பான ‘ஓம் நம சிவாய்’ என்ற தொலைக்காட்சி சீரியலில் பார்வதி பாத்திரத்தில் நடித்து தேசிய அளவில் டிவி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது ரோஜா சீரியல் மூலம் மீண்டும் தமிழக டிவி ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை காயத்ரி சாஸ்திரி, சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது தனது குடும்ப நிகழ்வுகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்வது உள்ளிட்டவை தொடர்பான போஸ்ட்களை ஷேர் செய்வார். அந்த வகையில் சமீபத்தில் தான் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை காயத்ரி சாஸ்திரி. 
View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)


தனது செல்ல மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்துள்ள காயத்ரி, நானும் என்னுடையதும். மேக்னட்டிக் எஃபெக்ட் (Me and mine. Magnetic effect) என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். தனது மகளுடன் நடிகை காயத்ரி சாஸ்திரி இருக்கும் ஃபோட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிகளவில் லைக்ஸ் கொடுத்து மற்றும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வைரலாக்கி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: