• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாடர்ன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை - வைரல் வீடியோ

மாடர்ன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை - வைரல் வீடியோ

சீரியல் நடிகை பிரியங்கா

சீரியல் நடிகை பிரியங்கா

நிஜ வாழ்க்கையில் சிங்கிளாக இருக்கிறார். ஆனால், சீரியலில் கதாநாயகன் சிபு சூரியனுடன் ரொமான்ஸில் வெளுத்து வாங்குகிறார்

  • Share this:
ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்காரி, மார்டன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

சன் டீவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’ரோஜா’ டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. விஜய் டீவியின் ’பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விறுவிறுப்பான டிவிஸ்டுகளுடன் ரோஜா சீரியல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரியின் குத்து டான்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. சீரியலில் ஹோம்லி கேர்ளாக புடவை அணிந்து வரும் அவர், சமூக வலைதளங்களில் மார்டன் உடையில் கலக்கி வருகிறார்.

Also Read: Sai Pallavi : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..

அவ்வப்போது, மார்டன் டிரஸ்ஸில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுக்கொண்டிருந்த பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் டிரஸ் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. மலைப்பிரதேசம் ஒன்றில் குட்டைப்பாவடையுடன் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு ‘ தான் Soul Mate -க்குக்காக’ காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், "I love to travel..waiting for my travel partner(my soul)…" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் நான்கு லட்சத்துக்கும் மேல் பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கும் பிரியங்கா, விரைவில் 5 லட்சத்தை எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)






நிஜ வாழ்க்கையில் சிங்கிளாக இருக்கிறார். ஆனால், சீரியலில் கதாநாயகன் சிபு சூரியனுடன் ரொமான்ஸில் வெளுத்து வாங்குகிறார். இவர்கள் இருவரின் ரொமான்ஸூக்காகவே சீரியல் பார்க்கும் இளசுகள் கூட்டம் அதிகம். அந்தளவுக்கு இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்து வாங்குகின்றனர். பிரியங்காவின் எகஸ்பிரசன்ஸூகள் மிகவும் கியூட்டாக இருப்பதால், அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்று வருகிறது. இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால், அவர் லேட்டஸ்டாக அணிந்திருக்கும் டிரஸ் மூலம் பிரியங்கா நல்காரி குத்தியிருக்கும் டேட்டூவையும் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Also Read: சோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா ?

 



 




View this post on Instagram





 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)






ஆயிரம் எபிசோடுகளை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் வில்லியாக அக்ஷையாக நடித்து வருகிறார். அவருக்கு முன்னதாக ஷாமிலிக்குமார் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக இருந்த நிலையில் சீரியலில் இருந்து அவர் திடீரென விலகினார். ஷாமிலியின் இடத்தில் வி.ஜேவாக இருந்து சீரியலுக்குள் நுழைந்திருக்கும் அக்ஷையா பிரம்மாதமாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்து சீரியலுக்குள் நுழைந்த வடிவுக்கரசி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வார டி.ஆர்.பியில் பின்னுக்கு சென்ற ரோஜா சீரியல் மீண்டும் முதல் இடத்தை பிடிப்பதற்காக கதைக்களத்தில் சூடேற்றியுள்ளனர். ரொமான்ஸ், டிவிஸ்ட் என கதைக்களம் நகர்ந்து வருகிறது. பாரதி கண்ணம்மாவும் இந்த சீரியலுக்கு இணையாக பல டிவிஸ்டுகளை அரங்கேற்றி வருவதால், இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பது என ரசிகர்களிடையே பெரும் குழப்பமே இருந்து வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: