"அன்பே வா" பூமிகாவை காப்பாற்ற "ரோஜா" சீரியல் நடிகர்கள் போட்டிருக்கும் பிளான்!

ரோஜா சீரியல் நடிகர்கள்

ரோஜா சீரியல் முன்னணி கேரக்டர்களான அர்ஜூன், ரோஜா மற்றும் கல்பனா ஆகியோர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான 'அன்பே வா'-வில் ஸ்பெஷல் கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.

  • Share this:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரோஜா ரசிகர்களை கவர்ந்த முக்கியமான ஒரு சீரியலாக இருந்து வருகிறது. பெங்களூருவை சேர்ந்த சிபு சூர்யன் ,அர்ஜூன் கேரக்டரிலும் விசாகபட்டினத்தை சேர்ந்த பிரியங்கா நல்கார், ரோஜா கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இவர்களை தவிர இந்த சீரியலில் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இதனிடையே ரோஜா சீரியல் முன்னணி கேரக்டர்களான அர்ஜூன், ரோஜா மற்றும் கல்பனா ஆகியோர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான 'அன்பே வா'-வில் ஸ்பெஷல் கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக சமீபத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பல்வேறு சீரியல்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவற்றின் பழைய எபிசோட்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் ரோஜா சீரியலின் ஷூட்டிங் மட்டும் சிக்கலின்றி நடத்தப்பட்டு நாள்தோறும் புது எபிசோட்கள் ஒளிபரப்பபட்டு வந்தன. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் காரணமாக நிர்வாகத்தினர் தனிக்கவனம் செலுத்தி இந்த சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். காதல், ரொமேன்ஸ், ஆக்ஷன் என்று கலவையான அதிரடி திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது இந்த ரோஜா சீரியல்.

Also Read :நடிகர் விஜய் பிறந்தநாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

அன்னபூரணியாக நடித்து வரும் வடிவுக்கரசியும் அனுபவத்திற்கேற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சன் டிவி-யில் தற்போது இரவு 9 மணிக்கு ரோஜா சீரியலும், 9.30 மணிக்கு அன்பே வா சீரியலும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் சூப்பர் ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் ரோஜா சீரியலின் முன்னணி மற்றும் முக்கிய கேரக்டர்களான ரோஜா, அர்ஜுன், கல்பனா ஆகிய மூன்று பெரும் "அன்பே வா" சீரியலின் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளது தொடர்பான ப்ரமோ வீடியோ சன் டிவி-யின் ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது.

Also Read: ‘விஜய் அண்ணா வெளிய வாங்க..!’- தளபதி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்

அன்பே வா குடும்பத்துக்குள்ள அர்ஜுனின் பிளான்! என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரமோ வீடியோவில் ஒரு பைக்கில் ரோஜா மற்றும் கல்பனா வரும் நிலையில் குறுக்கே மற்றொரு பைக்கில் அவர்களை வழி மறிக்கும் அர்ஜுன் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல என்று கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் பெண்கள் போன்ற கெட்டப்பில் இருக்கும் இருவரிடமும் பார்வதியை பற்றி புட்டுப்புட்டு வைக்குமாறு அறிவுறுத்துகிறார். அதற்கு கல்பனா இன்றோடு பார்வதியின் ஆட்டத்திற்கு முடிவு கட்டுவதாக கூறி அதற்கு தான் கேரண்டி என்று குறிப்பிடுகிறார். ரோஜா போறோம் பார்வதியை ஒரு கை பார்க்கிறோம், பூமிகாவை காப்பாத்துறோம் என்று கூறுகிறார்.

  
View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)


இந்த ப்ரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள்ரோஜா சீரியலின் பிரபலங்கள் உள்நுழைந்து கலக்க போகும் அன்பே வா சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: