• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யனுக்கு திடீர் கல்யாணம்? - ரசிகர்கள் ஷாக்!

ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யனுக்கு திடீர் கல்யாணம்? - ரசிகர்கள் ஷாக்!

நடிகர் சிபு சூர்யன்

நடிகர் சிபு சூர்யன்

நடிகர் சிபு சூர்யன் ஃபேன் பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள சமீபத்திய போஸ்ட்டில் அவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டதாக தகவல்.

  • Share this:
பல்வேறு தமிழ் டிவி சேனல்கள் ஏராள்மான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தாலும், சின்னத்திரை ரசிகர்களின் பெருவாரியான ஆதரவும் எப்போதும் சீரியல்களுக்கு தான் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான சன் டிவி எண்ணற்ற சீரியல்களை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பி வருகிறது. அதில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ரோஜா. சேனலில் ஒளிபரப்பாகும் வேறு எந்த சீரியலுக்கும் கிடைக்காத அமோக வரவேற்பு ரோஜா சீரியலுக்கு கிடைத்துள்ளது.

இதனால் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைமில் சன் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. தற்போது 900 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பெங்களூருவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன். விசாகபட்டினத்தை சேர்ந்த பிரியங்கா நல்கார் ரோஜா கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர்களை தவிர ரோஜா சீரியலில் வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி(கல்பனா கேரக்டர்), வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். எனினும் நடிகர் சிபு சூர்யனுக்கும், நடிகை பிரியங்கா நல்காருக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்து வருகின்றனர்.

சன் டிவி சீரியல் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகி உள்ள நடிகர் சிபு சூர்யன், சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் சகுந்தலா என்ற கன்னட படத்தில் ஒரு அரசியல்வாதி வேடத்தில் தற்போது நடித்து வருவதாகவும், இனி OTT மற்றும் சினிமா துறையில் கவனம் செலுத்த உள்ளதால் ரோஜா சீரியல் முடிந்தால் வேறு சீரியல்கள் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேட்டி காரணமாக சின்னத்திரை ரசிகர்கள் ஷாக் ஆகினர். இதனிடையே அவரது ரசிகர்களுக்கு மற்றொரு ஷாக் நியூஸ் சோஷியல் மீடியா வழியே வந்துள்ளது.

 




sibbu.arjun.sir.loyal.fan என்ற ஃபேன் இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள சமீபத்திய போஸ்ட்டில், "வாழ்த்துக்கள் அர்ஜுன்,@sibbu_suryan அண்ணா, தம்பதியருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வாழ்த்துக்கள்" என்ற கேப்ஷனுடன் நடிகர் சிபு சூர்யன் மற்றும் பெயர் தெரியாத ஒரு பெண்ணின் ஃபோட்டோ காணப்படுகிறது.

நடிகர் சிபு சூர்யனுக்கு ஃபோட்டோவில் காணப்படும் பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டதாக அந்த போஸ்ட்டில் கூறப்பட்டிருக்கும் தகவல் சிபு சூர்யன் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தையும், குழப்பத்தையும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சிபு சூர்யன், சில மணி நேரங்களுக்கு முன்பு கூட , "என்னை யாரும் விரும்புவதில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். எப்போதும் என்னைப் போல யாரும் இல்லை என்று சொல்லுங்கள்" என்று ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதற்கு கீழ் அவரது தீவிர ரசிகர்கள் உங்களுக்கு திருணம் ஆகிவிட்டதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா? என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர் ரிப்ளை எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: