பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்

பிரதமர் மோடி

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது.

  நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994-ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை 'Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார்.

  நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

  கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்று அவருக்கு அத்தொகை அவருக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இன்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதவனை பேட்டி காண்கிறார் நடிகர் சூர்யா. மேலும் நம்பி நாராயணன் எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் உள்ளிட்டவையும் ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

   

     இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது மாதவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: