புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசியை நேரில் சந்தித்து ரோபோ சங்கர் நிதி உதவி

ரோபோ சங்கர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்துள்ளார்.

  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ 140-க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் தவசி. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எலும்பும் தோலுமாக சமீபத்தில் வெளியான தவசியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் தமிழ் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி உதவி செய்தனர். அதேபோல, சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் பண உதவி செய்திருந்தனர்.


இந்தநிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் இன்று மதுரைக்குச் சென்று நேரில் சந்தித்து அவரது கவலையைப் போக்கும் வகையில் ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவச் செலவிற்கு உதவித்தொகையும் செய்திருக்கிறார். புற்றுநோயின் தாக்கத்தால் உருக்குலைந்து போயிருந்த தவசிக்கு  நம்பிக்கையூட்டும் விதத்தில் ரோபோ ஷங்கர் பேசியதும் நான் மீண்டு வருவேன் என்று தவசி பேசிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியிருக்கிறது.
Published by:Karthick S
First published: