படப்பிடிப்பு நடத்த அரசிடம் வைத்துள்ள புதிய கோரிக்கை என்ன? - ஆர்.கே.செல்வமணி பேட்டி 

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நடத்த அரசிடம் வைத்துள்ள புதிய கோரிக்கை என்ன? - ஆர்.கே.செல்வமணி பேட்டி 
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சுஜாதா விஜயகுமார், நடிகை குஷ்பூ, நடிகர் மனோபாலா
  • Share this:
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சுஜாதா விஜயகுமார், நடிகை குஷ்பூ, நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி,
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்ததற்கு அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும், அதே நேரத்தில்,  20 நபர்கள் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் செய்து தான் குறைந்தப்பட்சம் 60 நபர்கள் கொண்டு படபிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை வைத்ததாக கூறினார்.


தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பு, சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அரசு அனுமதித்துள்ள போதிலும், படப்பிடிப்பு துவங்கவில்லை எனவும்,  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த பின்னர் ஒரே நாளில் படப்பிடிப்பை துவங்குவோம் என தெரிவித்தார்.


Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading