முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்கார் சர்ச்சையை மீண்டும் கிளப்பும் ஆர்.ஜே.பாலாஜி

சர்கார் சர்ச்சையை மீண்டும் கிளப்பும் ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் எல்.கே.ஜி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் எல்.கே.ஜி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரபு ஆர்.ஜே.பாலாஜியை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே. பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது.

மேலும் அந்த பதிவில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்டரிலேயே இலவசங்களை விமர்சித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

வீடியோ பார்க்க: வீட்டில் பச்சைக்கிளி வளர்த்தவருக்கு ₹10,000 அபராதம் 

First published:

Tags: Kollywood, RJ Balaji