முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / RJ Ananthi: தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

RJ Ananthi: தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போது ஆர்ஜே ஆனந்தி செய்த காரியம்.. சமூக வலைத்தளங்களில் விவாதம்!

ஆர்ஜே ஆனந்தி

ஆர்ஜே ஆனந்தி

புத்தகங்களை தீவிரமாக படிக்கும் பழக்கம் கொண்ட ஆர்ஜே ஆனந்தி, "The Book show"என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்

  • 2-MIN READ
  • Last Updated :

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர் ஆர்ஜே ஆனந்தி என்று பிரபலமாக அறியப்படும் ஆனந்தி ஐயப்பன். RJ மற்றும் VJ-வாக தன் கலை பயணத்தைத் தொடங்கிய ஆனந்தி யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமானார். சோஷியல் மீடியாவில் இவர் பெற்ற பிரபலமே வெள்ளித்திரையில் கோமாளி படத்தில் யோகி பாபுவின் மனைவியாக, ஜெயம் ரவியின் தங்கையாக நடிக்க காரணமாக அமைந்தது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் இவர் அளித்த அளித்த பேட்டியில், “புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்” வாழ்க்கையில் தனது கருத்தை எவ்வாறு மாற்றியது என்பதைப் பற்றி பேசினார்.

புத்தகங்களை தீவிரமாக படிக்கும் பழக்கம் கொண்ட ஆர்ஜே ஆனந்தி, "The Book show"என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனல் மூலம் பல படைப்பாளர்களின் புத்தகங்களை வீடியோ வெளியிட்டு ரிவ்யூ செய்கிறார். மேலும் தன் சேனலை ஃபாலோ செய்பவர்களுக்கு புத்தகங்களை படிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி எடுத்து கூறுகிறார். இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலுடனான சமீபத்திய பேட்டியில் அவர் கூறிய ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் சோஷியல் மீடியா யூஸர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது தந்தை இறந்து விட்டதை அறிந்து இறுதியாக அவரது முகத்தை பார்க்க சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு காரில் சென்ற போது, தனக்கு அழுகை வரவில்லை மற்றும் மிகவும் சோகமாக உணரவில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கு முக்கிய காரணம் புத்தகங்களை வசிக்கும் பழக்கம் தான் என்றும் தெரிவித்தார். தான் படித்த புத்தகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வதாக கூறிய ஆனந்தி, தந்தையின் இறப்பிற்கு காரில் சென்ற போதும் அதையே செய்ததாக கூறினார். தந்தையின் உயிரற்ற உடலை காண சென்ற அந்த பயணத்தின் போது எனக்கு பிடித்த பாடல்களை கேட்டு, ஒவ்வொன்றையும் ரசித்தேன்.

ஆனந்தி

செல்லும் வழியில் கீ ரோஸ்ட் சாப்பிட்டேன். இந்த மாதிரியான சூழலை எப்படி கையாளுவது என்று யாரும் யாருக்கும் சொல்லி தர முடியாது. இயற்கையான ஒன்றாக இருக்கும் இதை புத்தக வாசிப்புகளின் மூலம் பெற்றதாக குறிப்பிட்டார் ஆனந்தி. நான் என் தந்தையின் முகத்தைப் பார்த்த போது, இது தான் வாழ்க்கை என்று உணர்ந்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் எப்படி முடிகிறது என்பதை பற்றியும் யோசித்து உணர்ந்தேன்.

என் தந்தையை இழந்ததற்காக நான் அழுதிருக்கலாம். ஆனால் மறுபுறம், அவர் வாழ்ந்த போது நடந்த விஷயங்களைப் பற்றி நான் நினைத்தேன். இறப்பதற்கு கடந்த 6 -8 மாதங்களாக அவர் மிகவும் வேதனையில் இருந்தார். அவர் இறந்து விட்டதால் அந்த வேதனை அவருக்கு போய்விட்டது என்று நான் நினைத்தேன். நம் வாழ்வை பற்றிய இந்த கோணம் ஏற்பட காரணம் புத்தகங்களை வாசிப்பது தான் என்றார். இதுவே வாழ்க்கையின் அழகு. இன்று எனது தந்தை நாளை நான். நாங்கள் தந்தைகான சடங்குகளை செய்து கொண்டிருந்தபோது, மழை பெய்தது. மழையை ரசிக்க என் தந்தை இல்லை. அந்த நேரத்தில் நான் சூரியனையும் காற்றையும் உணர்ந்தேன். உலகம் அழகாக இருந்தது, ஆனால் அதை உணர என் தந்தை இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் அந்த தருணங்களை அனுபவிக்க புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தன என்று கூறியிருந்தார். ஆர்ஜே ஆனந்தியின் இந்த பேச்சு சோஷியல் மீடியா யூசர்களிடையே ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு சிலர் ஆனந்தி மீளவும் நேர்மையாக பேசி உள்ளதாகவும், 10 மணி நேர பயணத்தில் எவ்வளவு நேரம் அழுது கொண்டே இருக்க முடியும் என்று கேட்டனர். ஒரு சிலர் புத்தக வாசிப்புக்கு போதையாகி விட கூடாது என்பதற்கான உதாரணம் தான் இது என ஆனந்தி பேசிய வீடியோவை ஷேர் செய்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு யூஸர் தந்தை இறந்த செய்தி கேட்ட பின்னும் துன்பத்தையே உணராத மனம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று வசைபாடி உள்ளார். மற்றொரு யூஸர், "அப்பாவுக்கு வலி இருந்தது அதுல இருந்து விடுபட்டுட்டார் standstill யாரும் சொல்லிகுடுக்க முடியாது. இதெல்லாம் சரி practical ஆனா இதெல்லாம் கடந்து வர புக்ஸ் புக்ஸ் புக்ஸ்ன்னு சொல்றது தான் மிகையா இருக்கு. More of highlighting that "I read lot of books" என்று கூறி உள்ளார்.

First published:

Tags: Book reading, Entertainment