• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓவியா-ரித்விகா... முதல் வாய்ப்பில் இவ்வளவு ஒற்றுமையா?

ஓவியா-ரித்விகா... முதல் வாய்ப்பில் இவ்வளவு ஒற்றுமையா?

நடிகைகள் ரித்விகா, ஓவியா

நடிகைகள் ரித்விகா, ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா மற்றும் ரித்விகாவுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஓவியாவுக்கான ரசிகர்கள் பட்டாளம், அவருக்கான வரவேற்பு பார்வையாளர்களிடம் பல மடங்கு அதிகரித்திருந்தது. இன்றளவும் பிக்பாஸ் என்றாலே பலருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது ஓவியாவாகத்தான் இருக்கும். இது பிக்பாஸ் 2-வது சீசனிலும் தொடர்ந்தது. இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களே கூட ஓவியாவை முன்னுதாரணமாக பேசினர்.

    இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது பிக்பாஸ் 2-வது சீசன் வெற்றியாளர் ரித்விகாவுக்கு சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    இந்த விளம்பரத்தில் நடித்தது குறித்த தகவலையும், அந்த விளம்பரத்தின் வீடியோவையும் ரித்விகா தனது ட்விட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



    See Also:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: