• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

நடிகர் ராஜிவ் கபூர்

நடிகர் ராஜிவ் கபூர்

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 58.

  • Share this:
நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராஜிவ் கபூர். சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ராஜிவ் கபூர் பிரேம்கிராந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜிவ் கபூர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் ராஜிவ் கபூர் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.









 




View this post on Instagram





 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)






ராஜிவ் கபூரின் சகோதரரும் பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகருமான ரிஷிகபூர் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அதற்கு முன்னர் ஒருவருடமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர் மும்பையில் உள்ள எச்.என் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மரணித்து இன்னும் ஒருவருடம் கூட ஆகாத நிலையில அவரது சகோதரரும் மறைந்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: