ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் நடிக்கும் ரீமா கல்லிங்கல்...!

ரீமா கல்லிங்கல் மற்றும் ஸ்டண்ட் சில்வா

நடிகை ரீமா கல்லிங்கல் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் பரத்துடன் யுவன் யுவதி படத்தில் நடித்தவர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரீமா கல்லிங்கல் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

பால்சக்கரியா மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர். இவரது பல கதைகள் சினிமாவாகியிருக்கின்றன. மம்முட்டிக்கு நடிப்புக்கான தேசிய விருது பெற்றுத் தந்த விதேயன் திரைப்படம், இவர் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டதே. சாகித்ய அகாதமி உள்பட பல விருதுகள் பெற்ற அவர், திரைத்துறையில் உள்ளவர்களின் இலக்கிய, அரசியல் அறிவு குறித்து பேட்டியொன்றில் பேசியிருந்தார்.

மம்முட்டிக்கு இலக்கியம், அரசியல் இரண்டிலும் போதிய அறிவு இல்லை என்பது சக்கரியாவின் கருத்து. மோகன்லாலை அவர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. இலக்கியம் மற்றும் உள்ளூர் முதல் உலக அரசியல்வரை அப்டேட்டாக இருக்கும் மலையாள திரைபிரபலம் என்று அவர் பாராட்டியவர், நடிகை ரீமா கல்லிங்கல். 2011 இல் பரத்துடன் யுவன் யுவதி படத்தில் நடித்தவர்

Also read...  தமிழக முதல்வர் ஸ்டாலின் மனித நாகரிகத்தின் உச்சம் - இயக்குனர் பாலா!

மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரீமா கல்லிங்கல் இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடந்தது திருமணம். திருமணத்துக்கு ஆகியிருக்கக்கூடிய பத்து லட்சத்தை அவர்கள் மருத்துவமனை ஒன்றிற்கு அளித்தனர். நடிகை காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திலீபுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது முதல் மலையாள சினிமாவில் உள்ள பெண்களுக்கென்று தனி அமைப்பு தொடங்கியதுவரை அனைத்திலும் முன்நின்றவர் ரீமா கல்லிங்கல். இப்போது சொற்பமாகவே நடிக்கிறார். இவரைப் பற்றி இவ்வளவு கூற காரணம், ரீமா கல்லிங்கல் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குகிறார். இயக்குனராக இவருக்கு முதல் படம் இது. இரண்டு நாயகிகள். ஒருவர் ரீமா கல்லிங்கல், இன்னொருவர் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இது இவரது முதல் படம். பிற விவரங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: