ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம்

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம்
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் பட போஸ்டர்
  • News18
  • Last Updated: September 22, 2018, 5:36 PM IST
  • Share this:
சிறந்த வேற்று மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு இந்திய திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரிமா தாஸ் தயாரித்து ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அசாம் மொழியில் உருவாகியிருக்கும் இந்தப் படம் 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பனிதா தாஸ், மன்பெண்ட்ரா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் படம் 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் வெளியான லவ் சோனியா, நந்திதாஸின் மண்டோ, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான பத்மாவத் உள்ளிட்ட 28 படங்களில் இருந்து வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை தேர்வு செய்துள்ளதாக இந்தியத் திரைப்படச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


இந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
First published: September 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading