• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடும்பத்தினருடன் 29வது திருமண நாளைக் கொண்டாடிய நடிகர் ரியாஸ் கான் - உமா!

குடும்பத்தினருடன் 29வது திருமண நாளைக் கொண்டாடிய நடிகர் ரியாஸ் கான் - உமா!

ரியாஸ் கான் உமா

ரியாஸ் கான் உமா

நடிகர் ரியாஸ் கான் - உமா தம்பதியினர் தங்களது 29வது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் ரியாஸ் கான். கஜினி, வின்னர் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    மேலும் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். மகராசி சீரியலில் செந்தூரா பாண்டியனாகவும், கண்ணான கண்ணே சீரியலில் தர்மதுரையாகவும், சித்தி சீரியலில் ஆனந்தாகவும், அண்ணாமலை சீரியலில் நல்லசிவமாகவும் மற்றும் நந்தினி சீரியல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

    இவர் நடிகை உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மருமகள், சந்திரகுமாரி, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் வம்சம் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் குக் வித் கோமளி, ஜோடி நம்பர் 1 மற்றும் கலாக்க போவாது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துள்ளார். மேலும் 2011ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகளையும் வென்றுள்ளார்.

    இவர்களுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு மகன்கள் உள்ளனர். சாரிக் பென்சில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by @umariyazkhan






    இருவரும் இணைந்து திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளனர். இதனை பார்த்த அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உமா தனது சமூக வலைத்தளத்தில் “இனிய திருமண நாள், என் வாழ்க்கையில் இந்த நாள் மறக்கமுடியாதது, என் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியையும், அன்பு மற்றும் கவனிப்பும் உன்னிடம் எனக்கு கிடைத்துள்ளது. உன்னை மிகவும் நேசிக்கிறேன்" என #happiness #love #couple #marriage #anniversary என்ற ஹேஷ்டேக்கில் ஷேர் செய்துள்ளார்.

    strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருமண நாளை முன்னிட்டு பல்வேறு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். நித்யா ராம், பிக் பாஸ் தமிழ் புகழ் ரம்யா பாண்டியன் மற்றும் பல திரைத்துறையினரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். முன்னதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ரியாஸ் கான், எனக்கும் உமாவுக்கு கலப்பு திருமணம் என்பதால், இரண்டு குடும்பங்களிலும் மனஸ்தாபம் இருந்தது. நான் உமாவை கடத்திட்டு வந்து கல்யாணமே செய்தேன். அதற்கு பிறகு ஷாரிக் பிறந்த பிறகுதான், இரண்டு குடும்பங்களும் மீண்டும் சேர்ந்தோம். அதனால் ஷாரிக்கை எங்கள் குடும்பமே ரொம்ப செல்லமாக வளர்த்தது என மகிழ்ச்சியாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: