தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

கோப்புப் படம்

ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு பதிவான பெட்டிகள் அனைத்தையும் சீல் வைக்கப்பட்ட அறையில் வைத்து மூடி போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவை முழுவதுமாக திங்கட்கிழமை நடத்த தேர்தல் பொறுப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முடிவு செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான நிர்வாக குழுவிற்கான வாக்கு எண்ணிக்கையை அன்றைய தினமே நடத்தவும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கையை அடுத்த நாள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு தயாரிப்பாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள். வழக்கமாக நடப்பது போல மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு முழுவதும் நடத்த வேண்டும் அல்லது அடுத்த நாள் காலை அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Also read... Soorarai Pottru | 'வெய்யோன் சில்லி...இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா' - இணையத்தில் வைரலாகும் சூரரை போற்று ஸ்டில்ஸ்இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அனைத்து பதவிகளுக்கான வாக்கி எண்ணிக்கையையும் திங்கட்கிழமை நடத்தலாம் என்று முடிவு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு பதிவான பெட்டிகள் அனைத்தையும் சீல் வைக்கப்பட்ட அறையில் வைத்து மூடி போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: