‘அபி டைலர்’ சீரியல் குறித்து நடிகை ரேஷ்மாவின் உற்சாகமான அறிவிப்பு

ரேஷ்மா பசுபுலேட்டி

சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுபலேட்டி தனது ரசிகர்களை மகிழ்விக்க, தனது புத்தம் புதிய நிகழ்ச்சியான ‘அபி டைலர்’ பற்றி சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • Share this:
சீரியல் ரசிகர்களுக்கு நடிகை ரேஷ்மாவின் அறிமுகம் தேவையில்லை. சின்னத்திரை மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார் ரேஷ்மா. பின்பு பல சீரியல்களில், பல்வேறு சேனல்களில் நடித்த ரேஷ்மா பசுபலேட்டி தனது புதிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை உற்சாகத்துடன் இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்தார்.

கலர்ஸ் தமிழ் சீரியலில் நேற்று முதல், (ஜூலை 19) ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலில் ரேஷ்மா அனாமிகா என்ற பாத்திரத்தில், கதாநாயகன் அசோக்கின் சகோதரியாக நடிக்கிறார். கதாநாயகன் பாத்திரத்தில், நடிகர் மதன் பாண்டியன் நடிக்கிறார்.

தன்னுடன் நடிக்கும் நடிகர் குழுவினருடன் இணைந்து புகைபப்டம் எடுத்த ரேஷ்மா, இன்ஸ்டாகிராமில், ‘மை ஸ்குவாட், மை ஃபேவரட்ஸ், #abhitailor’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நண்பர்களிடமிருந்து தொடர்ந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. அபி டைலர் என்ற சீரியல், சிறிய ஊரில் டைலராக இருக்கும் அபிராமி என்ற பெண்ணைப் பற்றியது. அபிராமியாக, ரேஷ்மா முரளிதரம் நடிக்கிறார். நாயகன் அஷோக்காக நடிக்கும் மதன் பாண்டியன், மிகப்பெரிய பெரிய தொழிலதிபர் மற்றும் அதே ஊரில் பெரிய கார்மென்ட் வணிகத்தை நிறுவுகிறார். அபிராமி மற்றும் அஷோக்கின் உலகம் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதும், பல்வேறு தடங்கல், போட்டி மற்றும் போராட்டங்களுக்கு இடையே தன்னுடைய தொழிலை எவ்வாறு விரிவு படுத்துகிறார் என்பதைப் பற்றிய கதை.ரேஷ்மா தற்போது பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். தினசரி ஒளிபரப்பாகும், வேலம்மாள் தொடரில் நாகவல்லி பாத்திரத்தில், பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா பாத்திரத்தில், அன்பே வா தொடரில் வந்தனா பாத்திரத்தில், நடித்து வருகிறார். இவை அனைத்துமே சீரியல்களின் முக்கியப் பாத்திரங்களாகும்.

Photos : லண்டனில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ப்ரியங்கா சோப்ரா- கலர்ஃபுல் போட்டோஸ்

மிகப்பெரிய சூப்பர் ஹிட் சீரியலான வம்சம் சீரியலில் சுப்ரியா என்ற பாத்திரம் மற்றும் உயிரே சீரியலில் DSP வசுந்தரா தேவி பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக தன்னுடைய கேரியரைத் தொடங்கினார் ரேஷ்மா.பல்வேறு சேனல் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகும் முன்பே, பல சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து மக்கள் மனத்தைக் கவர்ந்தவர் ரேஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்புக்குப் பின்பு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சீரியல்களில் வித்தியாசமான பாத்திரங்கள் வழியே, சின்னத்திரை பிரபலமானார் ரேஷ்மா. ரேஷ்மாவுக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: