Home /News /entertainment /

கணவரை விட்டு பிரிவாரா பிரபல சீரியல் நடிகை.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

கணவரை விட்டு பிரிவாரா பிரபல சீரியல் நடிகை.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Reshma

Reshma

Reshma Muralidharan | தற்போது ரேஷ்மா மற்றும் மதன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அபி டெய்லர்’ சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்து வருகின்றனர். காதலர்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்த இருவரும், கணவன் - மனைவியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலக்கி வந்தனர்.

மேலும் படிக்கவும் ...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘பூவே பூச்சுடவா’. காதல் மற்றும் குடும்ப பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவன், ரேஷ்மா முரளிதரன், கிருதிகா லட்டு, மதன் பாண்டியன், தினேஷ் கோபாலசாமி, மீனாகுமாரி, உமா பத்மநாபன், யுவராணி, மோனிஷா அர்ஷக் போன்ற பலர் நடித்திருந்தனர்.

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டரின் மகள்களான சக்தி மற்றும் மீனாட்சி. சக்தி குடுப்பதிற்காக எதையும் செய்பவள். அக்கா மீனாட்சி பணக்கார வீட்டு சுந்தரை காதலிக்க, அக்காவின் திருமணத்திற்காக சுந்தரின் அண்ணா சிவாவை திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கின்றார்கள் என்பது தான் கதை.

இதில் சக்தி கதாபாத்திரத்தில் ரேஷ்மா துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து,ரேஷ்மா விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் ஜீ தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் ரேஷ்மா ஒரே நேரத்தில் கொடுத்தார். ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்திருந்த மதனை காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அபி டெய்லர்’ என்ற சீரியலில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்தார்.



தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அபி டெய்லர்’ சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்து வருகின்றனர். காதலர்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்த இருவரும், கணவன் - மனைவியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலக்கி வந்தனர். இந்நிலையில் ரேஷ்மா மீண்டும் தனது தாய் வீடான ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read : வெளிநாடுகளில் எந்தெந்த தமிழ் படங்களுக்குத் தடை

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாம், அதில் ரேஷ்மாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ‘பூவே பூச்சுடவா’ சீரியலை தயாரித்த அதே டீம் தான், புதிய சீரியலையும் இயக்க உள்ளதாம். அதனால் ரேஷ்மாவை ஓகே சொல்ல வைத்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.

Also Read : மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் எச்சரிக்கை

அப்படி ரேஷ்மா நடிக்க சம்மதித்தால், அதில் கணவர் மதனே ஹீரோவாக நடிப்பாரா? அல்லது பூவே பூச்சுடவா சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான ரசிகர்களோ கலர்ஸ் தமிழில் மதனுடனும், ஜீ தமிழ் தினேஷ் உடனும் ஒரே நேரத்தில் இரண்டு சீரியலிலும் ரேஷ்மா நடித்தாலும் நாங்கள் பார்க்கத் தயார் என்றே சொல்கின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Actress Reshma, TV actress, Zee tamil

அடுத்த செய்தி