Home /News /entertainment /

டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கியது தவறு – நடிகை கஸ்தூரி

டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கியது தவறு – நடிகை கஸ்தூரி

கஸ்தூரி

கஸ்தூரி

டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு. அப்படியானால் கவிஞர் வைரமுத்து குற்றவாளி? என தாங்களே வாக்குமூலம் தருகிறார்களா? என்றார் கஸ்தூரி.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

    கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கஸ்தூரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு கடந்த 2 நாட்களாக நேரில் சென்று நிவாரணப் பெருட்களை வழங்கினேன். அங்கு மக்கள் அனைத்தையும் இழந்து தெருக்களில் நிற்கின்றனர்.

    சாலையில் சுலபமாக செல்லக்கூடிய இடங்களுக்கு மட்டும் சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், வாகன வசதி இல்லாத இடங்களுக்கு சென்று பொருட்களை தர வேண்டும். நிறைய கிராமங்களுக்கு இதுவரையில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இறுதியாகத்தான் சென்று அடைகின்றன.

    இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை வர உள்ளது. இதை முன்னிட்டு, மிகவும் குறைவான விலையில் குடிநீர் பாட்டில்களை வாங்கி ஒரு பெரிய கட்சி அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொன் விளையும் பூமியான டெல்டா மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்துவிடும். இதை அப்புறப்படுத்த அரசு தனி திட்டம் வகுக்க வேண்டும்.

    நிறைய ஆர்வலர்கள் முன் வந்து நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகின்றனர். அங்கு உள்ள மக்களின் தேவையை அறிந்து பொருட்களை கொடுத்தால் நல்லது. தார்பாய், மெழுகுவர்த்தி, போர்வைகள், பாய்கள், கால்மிதியடி போன்றவைதான் அவர்களின் தற்போதைய தேவை.

    அரசு சற்று மெதுவாக இயங்குவதால், வேகமாக இருக்கும் சிலர் வெளியில் தெரிகிறார்கள். இந்த அரசுக்கு கட்டுப்பட்ட சாதாரண தமிழச்சியாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன்

    டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு. அப்படியானால் கவிஞர் வைரமுத்து குற்றவாளி? என தாங்களே வாக்குமூலம் தருகிறார்களா?  சின்மயியை நீக்கியது முட்டாள்தனம். வைரமுத்து மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன் என்றார் கஸ்தூரி.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Actor Kasthuri, Cyclone Gaja, Singer Chinmayi

    அடுத்த செய்தி