தமிழ் திரை உலகின் அடுத்த தலைமுறை பிரதிநிதி... கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று

Youtube Video

ஒரு பாடலாசிரியர் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அவருடைய அலைவரிசைக்கு ஏற்ப ஒரு இசையமைப்பாளர் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படி நா.முத்துக்குமாருக்கு கிடைத்த ஒரு இசையமைப்பாளர்தான் யுவன் ஷங்கர் ராஜா

 • Share this:
  கண்ணதாசன், வாலி, வைரமுத்து என ஆளுமைகள் நிறைந்த தமிழ் திரை உலகின் அடுத்த தலைமுறை பிரதிநிதியாக வந்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். அவருடைய 46வது பிறந்தநாள் இன்று.

  காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார். இயற்பியல் மாணவரான இவர், தமிழின் பால் கொண்ட ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார். யாப்பிலக்கணத்தை முதுகலையில் முறையாகப் பயின்று சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்திருந்தாலும் அந்தப் புலமையை தன் வரிகளில் திணிக்காமல் எல்லோராலும் ரசிக்கக்கூடிய எளிமையான வரிகளை மட்டுமே மெட்டுக்குள் சேர்த்தார் முத்துக்குமார்.

  ஒரு பாடலாசிரியர் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அவருடைய அலைவரிசைக்கு ஏற்ப ஒரு இசையமைப்பாளர் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படி நா.முத்துக்குமாருக்கு கிடைத்த ஒரு இசையமைப்பாளர்தான் யுவன் ஷங்கர் ராஜா.  நவீன கால தமிழ் சினிமாவில் காதல் பிரிவையும் காதல் தோல்வியையும் நா.முத்துக்குமார் அளவுக்கு வரிகளில் கொண்டு வந்த பாடலாசிரியர் நிச்சயம் இருக்க முடியாது.  மழைய மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெயிலையும் ரசிக்க கற்றுத்தந்தவர் நா.முத்துக்குமார், அதேபோல் தாயின் அன்பை மட்டுமே அதிகம் பேசிய தமிழ் திரையுலகில் தந்தையின் அன்பையும் பதிவு செய்தவர் இவர்தான்.  "மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட தான் அழகு. மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு" என அன்பின் வழியே உலகை ரசித்த முத்துக்குமார், சைவம் படத்துக்காக அதை வரிகளாக்கி தனக்கான இரண்டாவது தேசிய விருதை பெற்றார்.  92 திரைப்படங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பாடல்கள்... இதில் 2 தேசிய விருது ஒரு மாநில விருது போன்றவை அவருடைய திரைப் பயணத்தை அலங்கரித்தாலும் தனது 46வது பிறந்தநாளில் அவர் நம்முடன் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: