துருவ நட்சத்திரம் பற்றி கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி
துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் | துருவ நட்சத்திரம்
- News18 Tamil
- Last Updated: June 10, 2020, 5:49 PM IST
நடிகர் விக்ரம் நடித்து வரும் பொன்னியின் செல்வன், கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்னை முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள ‘சியான் 60’பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு துவங்கி இன்னும் நிறைவடையாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குநர் கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விக்ரம் இன்னும் சில நாட்களில் டப்பிங் பணியை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருப்பதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பை நடத்தி முடித்து படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கவுதம் மேனனின் இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஆக்ஷன் - த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரமுடன் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: முதல் பட ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்த தமிழ் சினிமா இயக்குநர் - பிரபல நடிகை இரங்கல்
இந்நிலையில் 2017-ம் ஆண்டு துவங்கி இன்னும் நிறைவடையாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குநர் கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விக்ரம் இன்னும் சில நாட்களில் டப்பிங் பணியை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருப்பதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பை நடத்தி முடித்து படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கவுதம் மேனனின் இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க: முதல் பட ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்த தமிழ் சினிமா இயக்குநர் - பிரபல நடிகை இரங்கல்