• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிஸி சூட்டிங் ஷெட்யூலில் மகாபலிபுரம் பறந்த நடிகை - நண்பர்களுடன் கொண்டாட்டம்!

பிஸி சூட்டிங் ஷெட்யூலில் மகாபலிபுரம் பறந்த நடிகை - நண்பர்களுடன் கொண்டாட்டம்!

 நடிகை ரேகா கிருஷ்ணப்பா

நடிகை ரேகா கிருஷ்ணப்பா

படிக்காத பெண்ணாக இருப்பதால், அவரை பெண் பார்க்க வருபவர்கள் மணக்கொடை கேட்டு அடம்பிடிக்கின்றனர்.

  • Share this:
பிஸி சூட்டிங் ஷெட்யூலுக்கு இடையே நடிகை ரேகா கிருஷ்ணப்பா தோழிகளுடன் மகாபலிபுரத்துக்கு ஹேப்பியாக டூர் சென்று திரும்பியுள்ளார்.

சின்னத்திரையில் பவர்புல் ஆக்டிங் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரேகா கிருஷ்ணப்பா, அண்மையில் தோழிகளுடன் மகாபலிபுரம் சென்றுள்ளார். கடற்கரைக் கோவில், கற்சிற்பங்கள் என அனைத்தையும் பார்வையிட்ட அவர்கள், டூரில் ஜாலியாக இருந்துள்ளனர்.

கடற்கரைக் கோவிலில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்துள்ளனர். டூர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் என்ஜாய் செய்யுங்கள், நேரம் திரும்ப வராது எனக் கூறியுள்ளார்.

ALSO READ | விஜயின் பீஸ்ட் படத்தில் தனுஷ்? - சஸ்பென்ஸ் அப்டேட்..!

ரெஸ்டாரண்ட் ஒன்றில் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஸ்பெஷலாக ஆர்டர் செய்தும் சாப்பிட்டுள்ளனர். ரேகா கிருஷ்ணப்பா, திருமகள் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். தெய்வ மகள் சீரியலில் காயத்திரி குமாராக நடித்தது, அவருக்கு நல்ல புகழையும், பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது. மேலும், நந்தினி சீரியலில் மாதவி கதாப்பாத்திரத்திலும், நீலி தொடரில் தேவயானியாகவும் நடித்து அசத்தினார்.

 
 

அண்மையில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய தமிழும் சரஸ்வதியும் தொடரில் ‘சந்திரலேகா’ கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளர் தீபக் லீட் ரோலில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக சரஸ்வதி கதாப்பாத்திரத்தில் நக்சத்திரா நடிக்க உள்ளார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன் தமிழின் தாயாக கோதை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மகாலிங்கம் ராமச்சந்திரன் நடேசனாகவும் (தமிழ் தந்தை), பிரபு சொங்கலிங்கமாகவும் ( சரஸ்வதியின் தந்தை) நடிக்கின்றனர்.

ALSO READ |  சீனுராமசாமி, ஜீ.வி.பிரகாஷ் படத்தின் சூப்பர் அப்டேட்...!

கதைப்படி, சுறுசுறுப்பான பெண்ணாக இருக்கும் சரஸ்வதி அழகாகவும், சுட்டித்தனமாகவும் இருகிறார். 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற முடியாமல் திணறும் அவரை மற்றவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் சரஸ்வதி, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள்.

 
 

படிக்காத பெண்ணாக இருப்பதால், அவரை பெண் பார்க்க வருபவர்கள் மணக்கொடை கேட்டு அடம்பிடிக்கின்றனர். ஏழை பெண்ணான சரஸ்வதியின் வீட்டில் அவர்கள் கேட்கும் மணக்கொடையை கொடுக்க வசதி இல்லை.இது சரஸ்தியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்துக்கும் பெரும் நெருக்கடி மற்றும் கவலையைக் கொடுக்கிறது. அதேநேரத்தில் கதாநாயகனான தமிழ் மிகவும் பொறுப்பானவராக வளர்கிறார். சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும் அவர் குடும்பத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.

ALSO READ |  தொடங்கியது பிக் பாஸ் ஷூட்டிங்! போட்டியாளர்கள் யார் யார்?

தமிழும் படிக்காததால் நல்ல வரன் கிடைக்காமல் தமிழின் தாய் வருத்தத்தில் இருக்கிறார். இந்த நிலையில் தமிழும், சரஸ்வதியும் கோவிலில் சந்தித்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு இடையே உருவாகும் காதல், அதில் ஏற்படும் திருப்பங்களே மீதிக் கதை. இதுவரை ஒளிபரப்பான எபிசோடுகளில் சந்திரலேகா கதாப்பாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: