• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு

சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு

ரியா சக்ரபோர்த்தி

ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி, ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், சுசாந்தின் காதலி ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக சுசாந்த்தின் தந்தை பிகார் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில், ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையின்போது, ரியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரியாவிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தினர்.

    மூன்றாவது நாள் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரியா இன்று, செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜரானார்.

    இந்நிலையில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியாவைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று கைது செய்துள்ளது. கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: