Home /News /entertainment /

கொரியன் மிட்நைட் ரன்னர்ஸ் ரீமேக்கில் ரெஜினா, நிவேதா தாமஸ்

கொரியன் மிட்நைட் ரன்னர்ஸ் ரீமேக்கில் ரெஜினா, நிவேதா தாமஸ்

ரெஜினா, நிவேதா தாமஸ்

ரெஜினா, நிவேதா தாமஸ்

காமெடி த்ரில்லராக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தெலுங்கில் ரெஜினா, நிவேதா தாமஸ் நடிப்பில் எடுத்துள்ளனர். இரண்டு நாயகர்களுக்குப் பதில் இரண்டு நாயகிகள். சுதீர் வர்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தென்கொரிய திரைப்படமான மிட்நைட் ரன்னர்ஸ் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரெஜினாவும், நிவேதா தாமஸும் நடித்துள்ளனர். விரைவில் இது நெட்பிளிக்ஸ் வெளியீடாக வரவுள்ளது. கொரிய திரைப்படங்களை உரிமை வாங்காமல் காப்பியடிக்கும் காலம் மலையேறிவிட்டது. இணையம் வந்த பின் எந்த மூலையில் உள்ள திரைப்படத்தை காப்பியடித்தாலும் அடுத்தநாள் தெரிந்துவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் வழக்குப் போட்டு நஷ்டஈடாக பெரும் தொகை கொடுப்பதற்கு முறைப்படி உரிமம் வாங்கி ரீமேக் செய்யும் ஒழுக்கத்துக்கு இந்திய திரையுலகம் வந்துள்ளது.

மிஸ் கிரானி கொரியன் திரைப்படத்தை முறைப்படி வாங்கி ஓ பேபி என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். சமந்தா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2017 இல் கொரியாவில் வெளியான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தின் உரிமையை வாங்கி சாகினி, டாகினி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.
போலீஸ் அகடாமியில் பயிற்சி பெறும் இரு இளைஞர்கள் இரவு நேரம் ஒரு ஆள்கடத்தலைப் பார்க்கிறார்கள். அதனை போலீசின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். பிசனஸ்மேன் ஒருவரது மகன் கடத்தப்பட்ட விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை கவனிப்பதால் இவர்கள் கொண்டு செல்லும் புகாரை அலட்சியப்படுத்துகின்றனர்.

அதன் காரணமாக இவர்கள் இருவருமே அந்த கடத்தல் தொடர்பாக துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். காமெடி த்ரில்லராக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தெலுங்கில் ரெஜினா, நிவேதா தாமஸ் நடிப்பில் எடுத்துள்ளனர். இரண்டு நாயகர்களுக்குப் பதில் இரண்டு நாயகிகள்.
சுதீர் வர்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். உரிமை வாங்கித்தானே செய்றோம் என்ற கோதாவில் படத்தின் போஸ்டரைக்கூட அப்படியே காப்பியடித்துள்ளனர். விரைவில் இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.

ALSO READ |  விமான விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரோஜா! பரபரப்பு தகவல்

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Nivetha Thomas, Regina Cassandra

அடுத்த செய்தி