ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Netflix :நெட்பிளிக்ஸின் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இதுதான்..எத்தனை கோடி? எப்போ ரிலீஸ் தெரியுமா?..

Netflix :நெட்பிளிக்ஸின் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இதுதான்..எத்தனை கோடி? எப்போ ரிலீஸ் தெரியுமா?..

நெட் நோட்டீஸ்

நெட் நோட்டீஸ்

நெட்ஃபிளிக்ஸில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் 1500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.அந்த படத்தில் அப்படியென்ன சிறப்பு?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எத்தனை போட்டிகள் வந்தாலும் ஓடிடி உலகில் நெட்பிளிக்ஸ்தான் எம்பரர். இன்றுவரை அதை அடிக்க ஆளில்லை. நெட்பிளிக்ஸ் இதுவரை இல்லாத அளவில் ஹை - பட்ஜெட்டில் ரெட் நோட்டீஸ் என்ற படத்தை தயாரித்துள்ளது. இதுதான் நெட்பிளிக்ஸ் தயாரித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். கவனிக்க, சீரிஸ் அல்ல, திரைப்படம்.

ரெட் நோட்டீஸில் அப்படியென்ன சிறப்பு? முதலில் நடிகர்கள். ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராக் என்ற Dwayne Johnson நடித்துள்ளார். உடன் Ryan Reynolds. இவர்கள் இருவரையும்விட இந்தப் படத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் Gal Gadot. ஆம், வொண்டர் வுமனேதான்.

1985 இல் இஸ்ரேலில் பிறந்த Gal Gadot, 2004 இல் தனது 19 வது வயதில் மிஸ் இஸ்ரேலாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு இரண்டு வருடங்கள் ராணுவப் பயிற்சி. வொண்டர் வுமனில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து கிளப்புவதற்கு இந்த ராணுவப் பயிற்சி முக்கிய காரணம். இன்று உலகம் முழுவதுக்கும் அவரை தெரியும். டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் அதிக அதிகாரமிக்க 100 மனிதர்களில் இவரும் ஒருவர்.

Also Read : பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல் -மர்ம நபரிடம் விசாரணை

ரெட் நோட்டீஸில் Gal Gadot கலைப் பொருள்களை திருடுகிறவராக வருகிறார். குறிப்பாக ஓவியங்கள். Ryan Reynolds உலகின் தலைச்சிறந்த கான் ஆர்டிஸ்ட். போலி ஓவியங்களை உருவாக்குகிறவர். Dwayne Johnson...? இரண்டு பேர் சட்டத்துக்கு புறம்பானவர்கள் என்றால், மூன்றாவது நபர் போலீசாகத்தானே இருக்க முடியும். இவர் எஃப்பிஐ ஏஜென்டாக வருகிறார்.

இவர்கள் மூவருக்குள் நடக்கும் கண்ணாமூச்சியை சுமார் 1500 கோடிகள் செலவில் எடுத்துள்ளனர். ஸ்கைஸ் கிராப்பர்ஸ், வீ ஆர் தி மில்லர்ஸ் படங்களை இயக்கிய Rawson Marshall Thurber இந்த ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸை பொறுத்தவரை இந்தப் படம் ஒரு மைல் கல். நவம்பர் 12 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Netflix, OTT Release