• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்ப்ரைஸ் லவ் புரொபோசல் - நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ’பிகில்’ நடிகை!

சர்ப்ரைஸ் லவ் புரொபோசல் - நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ’பிகில்’ நடிகை!

ரெபா மோனிகா

ரெபா மோனிகா

துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு இளைஞன் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார்.

  • Share this:
    காதலர் கொடுத்த சர்ப்ரைஸ் லவ் புரொபோசலில் நெகிழ்ந்துப் போன ‘பிகில்’ பட நடிகை தற்போது அவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

    ’பிகில்’ படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தனது முகத்தை வெளியுலகத்துக்கு காட்ட பயந்து போய், வீட்டு சிறையில் அடைந்துக் கிடப்பார். விஜய் அவருக்கு தைரியம் சொல்லி, மீண்டும் வெளியில் வர வைப்பார். இதனை மையப்படுத்தி ’பிகில்’ படத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இடம் பெற்றிருக்கும்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரெபா மோனிகா ஜான், அந்த கொண்டாட்டத்தை இன்னும் மகிழ்ச்சியானதாக மாற்றும் விதத்தில், தனது நீண்டகால நண்பரான ஜோய்மோனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு இளைஞன் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார். ரெபாவும் அந்த புரோபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

    லாக் டவுனால் ரெபாவை சந்திக்க முடியவில்லை என்றும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் அவரைப் பார்த்து உடனடியாக புரொபோஸ் செய்ய முடிவு செய்ததாகவும் ஜோய்மோன் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

    ரெபாவும் ஜோய்மோனும் சில ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் இப்போதுதான் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள். ஜோய்மோனுடன் இருக்கும் படத்தை இதற்கு முன்பு பலமுறை ரெபா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: