• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு இது தான் காரணம்..

பிக்பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு இது தான் காரணம்..

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு சென்றதற்கு உடல்நிலை சார்ந்த பிரச்சனை தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்களில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்கேற்றுள்ளார். ஆரம்பத்திலிருந்தே இவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தங்கள் கதையை ஹவுஸ் மேட்ஸிடம் பகிர்ந்துக்கொள்ளும் டாஸ்க்கில் நமீதா, தான் ஒரு திருநங்கையாக  எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை எடுத்துரைத்தார்.

    ‘எங்கள மாதிரி உள்ளவங்கள புரிஞ்சிக்கணும், புரிஞ்சிக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுனால தான் நாங்க படாத கஷ்ட படுறோம், எங்கள படிக்க மட்டும் வையுங்க’ என்று கண்ணீருடன் பேசினார். ஒரு மணி நேர எபிசோடில் நமிதா மாரிமுத்து கிட்டத்திட்ட 40 நிமிடங்கள் பேசினார். இவரின் பேச்சை கேட்ட வீட்டில் உள்ள அனைவருமே நமீதா மாரிமுத்துவிற்கு ஹார்ட் சிம்பிள் கொடுத்தனர். பிக்பாஸ் வீட்டில் மட்டும் இல்லை சமூக வலைதளங்களில் நமீதா மாரிமுத்து மிகவும் திறமையான போட்டியாளர், அவர் தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் வழக்கம் போல் பிக்பாஸ் ப்ரோமோ ரீலிஸானது. அதில் நமீதா மாரிமுத்து இல்லை என்றும், அவர் போட்டியை விட்டு விலகியதாகவும் செய்திகள் பரவின. பின்பு 9.30 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எண்ட்ரி கொடுப்பதற்கு முன்பே பிக்பாஸின் வாய்ஸ் ஒலித்தது. ‘தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமீதா மாரிமுத்து போட்டியை விட்டு விலகினார்’ என்று பிக்பாஸ் மக்களிடம் தெரிவித்தார். பின்பு கமல்ஹாசன் வழக்கம் போல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் உரையாட ஆரம்பித்துவிட்டார்.  வெள்ளிக்கிழமை நடந்த காட்சிகள் எதுவும் ஒளிப்பரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    தற்போது நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு சென்றதற்கு உடல்நிலை சார்ந்த பிரச்சனை தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    also read : பிக்பாஸ் போட்டியாளர் திருநங்கை நமீதா மாரிமுத்து பற்றி தெரியாத தகவல்கள்..

    இதே போல் பிக்பாஸ் வரலாற்றில் பாதிலேயே போட்டியிலிருந்து விலகியுள்ளனர் மற்றும் பிக்பாஸால் சில காரணங்களுக்காக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டும் உள்ளனர். அந்த வகையில் சீசன் 1 ல் நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என்று கேட்டு போட்டியிலிருந்து விலகினார். அதே போல் சீசன் 1ல் பங்குப்பெற்ற பரணியும் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முயன்று, பிக்பாஸிடம் தன்னை வெளியே விடுங்கள் என்றுக் கூறி தானாக வெளியேறினார்.

    பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற மதுமிதா பிக்பாஸ் வீட்டின் விதிமீறலை உடைத்து தற்கொலை செய்ய முயன்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே சீசனில் போட்டியாளராக பங்குப்பெற்ற சரவணன் அவர் பெண்களிடம் காலெஜ் பருவத்தில் தவறாக நடந்துக் கொண்டதாக ஹவுஸ் மேட்ஸிடம் கூறினார்.'இந்த நிகழ்ச்சியை கோடிக் கணக்கானோர் பார்த்து கொண்டிப்பதால் நீங்கள் சொன்ன விஷயம் கடந்த காலத்தில் நடந்திருந்தாலும் அதனை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றுக் கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

    இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பங்கள் எல்லா சீசனிலும் நடந்துள்ளது. ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ல் ஒரு வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: