Home /News /entertainment /

மலரும் நினைவுகள்: சன்டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பு!

மலரும் நினைவுகள்: சன்டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பு!

சீரியல்

சீரியல்

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த சீரியலின் பெயர் தென்றல்! தென்றல் என்பதுமே மலரும் நினைவுகளாகி தென்றல் போல இதமாக இருக்கும். அந்த அளவுக்கு சின்னத்திரையில் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு சீரியல் என்று தென்றல் சீரியலைக் கூறலாம்.

மேலும் படிக்கவும் ...
    பல ஆண்டுகளாக சின்னத்திரையில் சீரியல்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒரு சில சீரியல்கள் எவர்கிரீன், சூப்பர் ஹிட், கிளாசிக் என்ற சிறப்பான அடைமொழியோடு ஆண்டுகள் கடந்தாலும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.

    2000 ஆண்டுக்குப் பிறகு சாட்டிலைட் தொலைக்காட்சிகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில் பொழுது போக்கிற்கு என்ன செய்வது என்பதற்கான விடையாகத்தான் சீரியல்கள் தொடங்கப்பட்டன. முன்பெல்லாம், இப்போது ஒளிபரப்பாவது போல தினமும் ஒரு எபிசோடு என்று சீரியல் ஒளிபரப்பாகாது. திங்கள்கிழமை ஒரு சீரியல் ஒளிபரப்பானால் அதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் திங்கட்கிழமை எபிசோடில் தான் பார்க்க முடியும். உலகம் பல விதங்களில் வளர்ச்சி அடைந்த பொது, பொழுது போக்குக்கான அம்சங்களும் அதிகரித்தன. நாள் முழுவதும் சீரியல்கள் என்ற தற்போதைய நிலை நிலவி வருகிறது.

    அதே நேரத்தில், கூறியுள்ளது போல எத்தனை சீரியல்கள் வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அந்த மலரும் நினைவுகளை தற்போது கலர்ஸ் தமிழ் மீண்டும் கொண்டுவரப்போகிறது!

    கலர்ஸ் தமிழில் தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆகிறது. அப்படி இருக்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கலர்ஸ் தமிழ் சேனலே இல்லையே என்று சந்தேகம் எழும்பலாம்! லாக் டவுனில் மர்மதேசம் என்ற தனது கிளாசிக் சீரியலைத் சன் டிவி ஒளிபரப்பியது நினைவிருக்கிறதா? அப்போது புதிய சீரியல்கள் எதுவும் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில் பல சேனல்களும் அவ்வாறு செய்தன. அதேபோல சன் டிவியின் கிளாசிக் சூப்பர் ஹிட் சீரியலைத் தான் கலர்ஸ் தமிழ் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த சீரியலின் பெயர் தென்றல்! தென்றல் என்பதுமே மலரும் நினைவுகளாகி தென்றல் போல இதமாக இருக்கும். அந்த அளவுக்கு சின்னத்திரையில் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு சீரியல் என்று தென்றல் சீரியலைக் கூறலாம்.

    தென்றலில் ஹீரோவாக, சின்னத்திரையின் செல்லப்பிள்ளை, தீபக் மற்றும் நாயகியாக அழகிய ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ருதியின் அப்பா ரோலில், நடிகர் சுபலேக சுதாகர் அற்புதமாக நடித்திருப்பார்.

    துளசி மற்றும் தமிழ் கதாப்பாத்திரங்கள் என்றென்றும் நீங்காமல் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து ரோஜாஸ்ரீ இதில் வில்லியாக நடித்திருந்தார். இவருடைய பாத்திரமும் மிகப் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    Read More : 14 வருடங்களுக்குப் பிறகு... “கனா காணும் காலங்கள்” ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்!

    தொடக்கத்தில் மூன்று பெண்களின் கதை என்று தொடங்கிய சீரியல் போக போக துளசி என்ற கதாபாத்திரம் படம் பல கஷ்டங்களை இயல்பாக எடுத்துக் காட்டியது. துளசிக்கும் தமிழுக்கும் இடையிலான காதல், இவர்களின் திருமணம் இதெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது, இவர்களின் காதல் எபிசோடுகளும் டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தன. நாடகத்தில் காதலை அழகாக காட்டிய சீரியல்களில் தென்றல் சீரியல் முன்னணியில் இருக்கும். அதே போல, சித்தி கொடுமை, அப்பாவின் இயலாமை என்று பல விஷயங்களை இந்த சீரியல் இயல்பாக நடப்பதைப் போலவே வெளிகாட்டியது.

    மே 16 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழில் மதியம் 2:00 மணி க்கு தென்றல் சீரியல் மறு ஒளிபரப்பாகிறது!
    Published by:Elakiya J
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

    அடுத்த செய்தி