மாஸ்டர் பட ஹீரோயினுக்கு டப்பிங் பேசிய நடிகை!

மாஸ்டர் பட போஸ்டர்

நடிகை ரவீனா நாயகியாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

 • Share this:
  மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகனனுக்கு பிரபல நடிகை ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  இந்தமாதம் திரைக்கு வரவிருந்த இத்திரைப்படம் ஊரடங்கால் தள்ளிப்போய் உள்ளது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், பேராசிரியையாகவும் நடித்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு ஒரு கிடாரியின் கருணை மனு திரைப்படத்தில் நடித்த நடிகை ரவீனா டப்பிங் பேசியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கெனவே நயன்தாரா, எமி ஜாக்‌ஷன், அமலாபால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

  நடிகை ரவீனா நாயகியாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் - அதிரடி அப்டேட் கொடுத்த மணிரத்னம்!
  Published by:Sheik Hanifah
  First published: