மீண்டும் விஜய் டிவி-க்கு வந்த பிரபல சீரியல் நடிகை! எந்த சீரியல் தெரியுமா?

மீண்டும் விஜய் டிவி-க்கு வந்த பிரபல சீரியல் நடிகை! எந்த சீரியல் தெரியுமா?

ராஷ்மி ஜெயராஜ்

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ்.

 • Share this:
  மீண்டும் விஜய் டிவி-க்கு திரும்பியிருக்கிறார் நடிகை ராஷ்மி ஜெயராஜ்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ். அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன.   
  View this post on Instagram

   

  A post shared by Rashmi Jayraj (@rashmi_jayraj)


  அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ’சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடித்து வருகிறார்.

  Rashmi Jayaraj in Naam Iruvar Namakku Iruvar 2
  ராஷ்மி ஜெயராஜ்


  இந்நிலையில் தற்போது ராஷ்மி ஜெயராஜ் மீண்டும் விஜய் டிவி-க்கு வந்திருக்கிறார். பாவாடை தாவணியில் சீரியல் கெட்டப்பில் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, புதிய தோற்றத்தில் விஜய் டிவி சீரியல் படப்பிடிப்பில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

  அந்த சீரியல் வேறெதுவும் இல்லை. ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் தான் இணைந்திருக்கிறார் ராஷ்மி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: