ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷங்கர் - ராம் சரண் உடன் இணைகிறாரா ரன்வீர் சிங்?

ஷங்கர் - ராம் சரண் உடன் இணைகிறாரா ரன்வீர் சிங்?

ரன்வீர் சிங் - ஷங்கர்

ரன்வீர் சிங் - ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கமலுக்கு காலில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் தொடங்க அதற்கு பின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருக்கிறார். எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் 50-வது படத்தை ஷங்கர் இயக்க ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ராம் சரண் உடன் இணைந்து நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: மாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு

அதேவேளையில் ரன்வீர் சிங் நடிப்பில் ஷங்கர் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதில் ரன்வீர் சிங் முனைப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ranveer singh, Director Shankar, Ram Charan