முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'நீங்க யார்?' என்று கேட்ட வர்ணனையாளர்..! கூலாக பதிலளித்த ரன்வீர் சிங்.. - வைரலாகும் வீடியோ

'நீங்க யார்?' என்று கேட்ட வர்ணனையாளர்..! கூலாக பதிலளித்த ரன்வீர் சிங்.. - வைரலாகும் வீடியோ

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

Ranveer Singh | F1 கார் பந்தயத்தை நேரில் காண அபுதாபிக்கு சென்ற ரன்வீர் சிங் யார் என்று F1 வர்ணனையாளர் மார்ட்டின் ப்ருண்டால் அடையாளம் காணப்படாமல் போனா வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட்டின் வெற்றிகரமான நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி, கல்லி பாய் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்று நடிக்கும் சவாலான கதாபாத்திரங்களின் மூலம் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான தனி இடம் பிடித்திருந்தாலும் அடிக்கடி இவர் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றே கூறலாம்.

இவர் மிகவும் ஆடம்பரமான ஆளுமை கொண்டவர், அதுவே அவரை கூட்டத்தில் இருந்து தனித்து காட்டும். இவரது ட்ரெஸ்ஸிங் ஸ்டைக்கு என்றே பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனை காதல் திருமணம் செய்தார் ரன்வீர்.

இந்நிலையில் தற்போது F1 கார் பந்தயத்தை நேரில் காண அபுதாபி சென்ற ரன்வீர் சிங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அபுதாபியில் நடைப்பெற்ற F1 கார் பந்தயத்தை நேரில் காண சென்ற ரன்வீர் சிங்கிடம் முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் பந்தயம் முடிந்த பின்னர் "தற்போது தாங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார், அதற்கு நடிகர் ரன்வீர் சிங் எப்போதும் போல தனது உற்சாகமான தொனியில் 'On top of the world' என்று பதிலளித்தார். பிறகு F1 ரேஸைப் பிடிக்கும்போது எப்படி உற்சாகத்தை உணர முடியும் என்றார். பின்னர் ரன்வீர் சிங் யார் என்பதை சிறிது நேரத்தில் மறந்த மார்ட்டின் பிரண்டில் நீங்களே உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் ரன்வீரிடம் கூறுகிறார். அதைக்கேட்ட நடிகர் சிறிதும் அதிர்ச்சியடையாமல் மிகவும் இனிமையாகவும், மாறாத சிரிப்புடனும் "நான் ஒரு பாலிவுட் நடிகர். இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவன். நான் ஒரு எண்டர்டெயினர்" என்று மிகவும் கூலாக பதிலளித்தார். மேலும் தான் அணிந்துள்ள ஆடைகளை மறுநாள் காலை திருப்பித் தரவேண்டும் எனவும் கேலியாக கூறுகிறார்".

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் அவரது பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வர்ணனையாளருக்கு ரன்வீர் சிங் அளித்த பதில் மரியாதைக்குரியது என்றும் ரசிகர்கள் கூறு வருகின்றனர்.

Also Read : WATCH – ’குக் வித் கோமாளி’ சுனிதாவின் அசாம் வீடு!

top videos

    அபுதாபியில் நடந்த F1 கார் பந்தய நிகழ்ச்சியில் எகானை சந்தித்த ரன்வீர் சிங் அவருடன் சேர்ந்து ஷாருக்கானின் 'சமக் சல்லோ' பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Actor Ranveer singh, Entertainment, Tamil News, Viral Video