Home /News /entertainment /

ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானது கங்கனா ரனாவத்தின் ”தலைவி” நியூலுக்..!

ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானது கங்கனா ரனாவத்தின் ”தலைவி” நியூலுக்..!

ஜெயலலிதா பயோபிக் தலைவி

ஜெயலலிதா பயோபிக் தலைவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, பிப்ரவரி 24-இல் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான ”தலைவி” திரைப்படத்தில் நியூ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஏ.எல் விஜய் இயக்கத்தில், கே.வி விஜயேந்திர பிரசாத் எழுத்தில் வெளிவர இருக்கும் தலைவி திரைப்படத்தில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, ப்ராஸ்தெடிக் மேக்கப்பில் நிஜமான தோற்றத்தை காணமுடியவில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல் இந்த நியூ லுக் போஸ்டரை வெளியிட்டு, ‘அம்மா ஜெயலலிதாவை’ நினைவு கூர்வதாக பதிவிட்டுள்ளார்.

Also See..
Published by:Gunavathy
First published:

Tags: Jayalalitha, Jayalalitha Biopic, Thalaivi

அடுத்த செய்தி