காதலி கூறிய ஒரு பதில்... ராணாவிற்கு குவியும் வாழ்த்து...ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாட்டம்!

காதலி கூறிய ஒரு பதில்... ராணாவிற்கு குவியும் வாழ்த்து

நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  ட்விட்டரில் Congratulations Rana என்ற ஹேஷ்டேகில் நடிகர் ராணாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார்.

  இவரது திருமணம் குறித்து திரையுலகு மட்டும் அல்லாது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நடிகர் ராணா தனது திருமணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ் ராணாவின் காதலி. இவர் ஹைதராபாத்தில் உள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இவர், சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நிறுவனம் வைத்துள்ளார்.

  இதனிடையே தற்போது இவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ராணா. அவள் ஓகே சொல்லி விட்டாள் என ட்வீட் செய்துள்ளார். இதற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


   

                    Also see:


   
  Published by:Sankaravadivoo G
  First published: