'கும்கி' திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்திருக்கும் ராணா, 'பாகுபலி' படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.
3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும் காடுகள், மலைகளில் படமாக்கியுள்ளது படக்குழு. திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அதன் பிரமாண்டம் தெரியும் என்பதால் தியேட்டரில் தான் ‘காடன்’ வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க: கணவருடன் ஹிமாலாயாவிற்கு ட்ரெக்கிங் சென்ற காஜல்.. கமெண்ட் செய்த அனுஷ்கா
ஏற்கெனவே ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதையடுத்து 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 26-ம் தேதி ‘காடன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.