HOME»NEWS»ENTERTAINMENT»ramya pandian welcome video with kuthu dance msb

மேளதாளத்துடன் வரவேற்பு... தெருவில் நடனமாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ

பிக்பாஸ் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேளதாளத்துடன் வரவேற்பு... தெருவில் நடனமாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ
ரம்யா பாண்டியன்
  • Share this:

தமிழில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிக வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி வெற்றியடைந்தார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இறுதிவரை வந்த நடிகை ரம்யா பாண்டியன் கடைசி நாளில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற அவருக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வீடியோவாக ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
View this post on Instagram
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)


அந்த வீடியோவில், தான் வசிக்கும் தெருவுக்கு ஜீப்பில் வந்து இறங்குகிறார் ரம்யா பாண்டியன். மேளதாள வாத்தியங்களை கலைஞர்கள் இசைக்க, சரவெடி கொளுத்தி மாலை மரியாதையுடன் ஆரத்தி எடுத்து அன்போடு வரவேற்கிறார் அவரது தாயார். பின்னர் அனைவரும் உற்சாகத்தில் நடனமாட அவர்களுடன் தெருவிலேயே இறங்கி ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்திய ரம்யாவுக்கு கேக் வெட்டியும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர்.



மேலும் படிக்க: தயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது குற்றச்சாட்டு

தனக்கு கிடைத்த வரவேற்பை வீடியோவாக பதிவிட்டிருக்கும் ரம்யா பாண்டியன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு மில்லியன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
Published by:Sheik Hanifah
First published: