ரம்யா பாண்டியன் உடன் கைகோர்த்த பிரபல ஹீரோயின்

ரம்யா பாண்டியன் உடன் கைகோர்த்த பிரபல ஹீரோயின்

படபூஜை

ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளார்.

  • Share this:
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி 2டி நிறுவனத்தின் மூலம் '36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய 'சூரரைப் போற்று' படம் வரை பல படங்களைத் தயாரித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் 2டி நிறுவனம் தயாரிக்கும் 14-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது.

இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குநர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம்.

இவர்களுடன் இணைந்து 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
Published by:Sheik Hanifah
First published: