ஆரி ரசிகர்களின் விமர்சனம்... ரம்யா பாண்டியனின் சகோதரர் வேண்டுகோள்

ஆரி ரசிகர்களின் விமர்சனம்... ரம்யா பாண்டியனின் சகோதரர் வேண்டுகோள்

ரம்யா பாண்டியன் - ஆரி

ரம்யா பாண்டியனுக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு அவரது சகோதரர் பரசு பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 18 போட்டியாளர்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் நேற்று 9-வது போட்டியாளராக அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்திருக்கிறது.

நிகழ்ச்சி முடிவடைய இன்னும் குறைந்த நாட்களே மீதமிருக்கும் நிலையில் இனி வரும் வாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரும் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காதவர்களை எதிர்த்தும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது சிலநேரங்களில் சண்டையாக மாறி விடுவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற கோழி - நரி டாஸ்க்கில் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று போராடிய ஆரியே  அதை கடைபிடிக்கவில்லை என்று  ரம்யா பாண்டியன் நேற்று குற்றம்சாட்டினார் . ஆனால் வீட்டின் கேப்டனாக விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துக் காட்டி சரியாக விளையாட வழி செய்திருக்கலாம் என்று ரம்யா பாண்டியனுக்கு அட்வைஸ் வழங்கினார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஆரியின் நடவடிக்கைகளை ரம்யா பாண்டியன் விமர்சித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவரை ஆரியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதைப்பார்த்த ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

அதில், "ஒரு பெண் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆரியே இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்தால் தனது ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவார்.ஆரியின் சமூக செயற்பாடுகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருடைய ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு கேம் ஷோவாக பார்க்க வேண்டும். இந்தப் போட்டியில் திறமையான ஒருவர் வெல்லப் போகிறார். எனவே மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது.உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஆதரவளியுங்கள். மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வரும் அவரது ரசிகர்களுக்கு நன்றி” இவ்வாறு பரசு பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பரசு பாண்டியனின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: