மகனின் 16-வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன் - பிரபலங்கள் வாழ்த்து

நடிகை ரம்யா கிருஷ்ணன்

தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்

  • Share this:
தனது 14-வது வயதில் ‘வெள்ளை மனசு’என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், அதற்கு முன்பாகவே ‘புலரும்போள்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.

90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மன் படங்களிலும் நடித்து அசத்தினார். 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தவறவில்லை. ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து நந்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ‘குயின்’ வெப் தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸில் பாலியல் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.

தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் பார்ட்டி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் ஆகியோருடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் ஒரு சில தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)






2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன் இன்று தனது மகன் ரித்விக் கிருஷ்ணாவின் 16-வது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்த உமா ரியாஸ்கான் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: