பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் புதிய கான்செப்டாக பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி ’பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பெயரில் தொடங்கியது. ஷிவானி நாராயணன், வனிதா விஜயகுமார், ஜித்தன் ரமேஷ், கேப்ரியல்லா, ஆஜீத், சென்றாயன், சோம்சேகர், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பங்கேற்றுள்ளனர்.

Also Read : சன் டிவி சீரியலில் நடிக்கும் அஜித் பட நடிகை - யார் தெரியுமா?

வாரம்தோறும் வீக் என்டில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடங்கியதும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. சீரியல் மற்றும் சின்னத்திரை சூட்டிங் நிறுத்தப்பட்டன. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜீத், கேப்ரியல்லா, சென்றாயன் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இதனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



போட்டியாளர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சில வாரங்கள் கடந்த நிலையில், சிகிச்சை எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள் கேப்ரியல்லா, சென்றாயன் மற்றும் ஆஜீத் ஆகியோரும் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read : சீனப்பெண் போல் இருப்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது - மௌன ராகம் சீரியல் நடிகை ஓபன் டாக்!

அதில், "பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. அனைத்துவிதமான முன்னெச்சரிக்கைகளுடன், உரிய விதிமுறைகளை பின்பற்றி சூட்டிங் நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். இதேபோல், போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் வனிதா விஜயக்குமாரும் பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங்கிற்கு ’ஆன் தி வே’ என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஈரோடு மகேஷ் மற்றும் தீனா இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Also Read : காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது

காமெடி, கலாட்டாவுக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமான கான்செப்ட் மற்றும் நடன ரவுண்டுகள் இதில் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் விருந்தாக அமையும். ஏற்கனவே ரசிகர்களாக இருந்தவர்களுக்கு பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் தொடங்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சிடைந்துள்ளனர். ரம்யா கிருஷ்ணனின் டிவிட்டர் பக்கத்தில், வெல் கம் பேக் மேடம் என கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், காமெடியிலும் கலக்குகிறீர்கள் என கூறியுள்ளனர். திரைப்படத்தில் மட்டுமல்ல நடுவராகவும் சிறப்பாக செயல்படுகிறீர்கள் எனவும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: