Home /News /entertainment /

Exclusive | ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன - ரம்யா கிருஷ்ணன்

Exclusive | ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன - ரம்யா கிருஷ்ணன்

குயின் சீரியலில் ரம்யா கிருஷ்ணன்

குயின் சீரியலில் ரம்யா கிருஷ்ணன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :
1999ம் ஆண்டு ’படையப்பா’ படம் வெளியான போது, ஜெயலலிதாவை இமிடேட் செய்து நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என பரவலாக பேசப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். குயின் வெப் சீரியலில் சக்தி சேஷாத்ரி எனும் கதாபாத்திரத்தில், ஜெயலலிதாவாகவே மாறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவரிடம் நாம் பேசிய போது...

கேள்வி: எதனால் இந்த ஸ்கிரிப்ட்யை தேர்வு செய்தீர்கள்?

பதில்: இயக்குநர் கவுதம் மேனம் என்னிடம் இந்த ஸ்கிரிப்டை கூறினார். சக்தி சேஷாத்ரி கதாபாத்திரம் மிகவும் வலியானதாக இருந்தது. சக்தி சேஷாத்ரி வலுகட்டாயமாக நடிகையாகிறாள். பின்னர் அந்த துறையில் பெரிய நட்சத்திரமாக உயருகிறாள். தொடர்ந்து அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியடைகிறார். ஆண்கள் நிறைந்த துறையில் இந்த பயணம் என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாதது. எந்த பெண்ணாக இருந்தாலும் இதுபோன்ற கம்பீரமான, சக்திவாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க விரும்புவார்கள். அப்படி தான் நானும் இதை தேர்வு செய்தேன்.

கேள்வி: இந்த கதாபாத்திரம் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

பதில்: சக்தி சேஷாத்ரி காதாபாத்திரத்தும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. நான் திரைதுறைக்கு விருப்பப்பட்டு வரைவில்லை. நிர்பந்தத்திற்காக வந்தேன். ஆரம்பத்தில் என்னை திமிரு பிடித்தவள் என்றார்கள். ஆண்ணாதிக்கம் நிறைந்த இந்த துறையில் எனக்கான இடத்தை உருவாக்கினேன்.

கேள்வி: குயின் வெப் சீரியலுக்கும், ஜெயலலிதா வாழ்க்கையும் நிறைய ஒற்றுமை உள்ளதே?

பதில்: இந்த வெப் சீரியல் அனிதா சிவக்குமாரன் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.

கேள்வி: உங்கள் தோற்றமும், நடிப்பும் கூட ஜெயலலிதா போல தானே உள்ளது?

பதில்: எனக்கு ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். அவருடைய ஆளுமையை பார்த்து வியந்திருக்கிறேன். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நான் விரும்புகிறேன். அவருடைய வாழ்க்கைக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

கேள்வி: சக்தி சேஷத்ரி கதாபாத்திரத்தில் ஜெயலலிதா போல் இருக்க தயார்படுத்திக்கொண்டீர்களா?

பதில்: இல்லை. இந்த கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு அதற்கு தேவையானதை கொண்டு வந்துள்ளேன். இயக்குனர் நான் நானாக இருக்கவே தெரிவித்தார். இந்த வெப் சீரியலுக்கு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

Also See...
Published by:Sankar
First published:

Tags: Jayalalitha Biopic, Queen, Ramya krishnan

அடுத்த செய்தி