இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படம்!

படத்தின் போஸ்டர்

லெஸ்பின்களாக நயினா கங்குலியும், அப்ஸராவும் நடித்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் கோபால் வர்மா இப்படித்தான் தனது புதிய படத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 'இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படம்.'

சத்யா, கம்பெனி, சர்கார், சர்கார் ராஜ், ரங்கீலா என மறக்க முடியாத படங்களை தந்தவர் ராம் கோபால் வர்மா. இன்றும் யோசிக்க தயங்கும் பல கதைகளை பல பத்து வருடங்களுக்கு முன்பே இயக்கியவர். இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என மாதத்துக்கு இரண்டு படம் எடுக்கிறார். அவை வருவதும் தெரியாது போவதும் தெரியாது

இந்த வருடம் - அதாவது 2021 எடுத்துக் கொண்டால், ஐந்து மாதங்கள் முடிவதற்குள் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். இந்தியில் ஒன்று, தெலுங்கில் இரண்டு. நாளை மறுநாள் அவர் இயக்கியிருக்கும் டி கம்பெனி திரைப்படம் ஸ்பார்க் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது, தாவூத் இப்ராஹிம் எப்படி உலகம் அறிந்த பயங்கரவாதியானான் என்பதை சொல்லும் திரைப்படம். நாளை மறுநாள் இப்படம் வெளியாவதுடன் வர்மாவின் கணக்கில் இந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கை நான்காக உயரும். அதற்குள் அடுத்தப் படம் வெளியீட்டு தயாராக உள்ளது. அதுதான் 'டேஞ்சரஸ்.'

இதுவொரு லெஸ்பியன் திரைப்படம். ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள் பரஸ்பரம் தங்களுக்குள் அன்பை கண்டு கொள்கிறார்கள். காதல் புரிகிறார்கள். இவர்கள் இருவரும் ஆபத்தான கிரிமினல்களிடம் முதலில் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு கிரிமினல்களைவிட ஆபத்தான போலீஸ்காரர்களிடம் (இதை நாம் சொல்லவில்லை, வர்மாவின் வாக்கியம்) இந்த ஆபத்தான விளையாட்டு எப்படி முடிகிறது என்பது கதை.

லெஸ்பின்களாக நயினா கங்குலியும், அப்ஸராவும் நடித்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதுவும் ஸ்பார்க் ஓடிடியில் வெளியாகிறது.

ராம் கோபால் வர்மா டேஞ்சரஸ் படத்தின் போஸ்டரை வெளியிட்டதும் ரசிகர்கள் அவரை மொய்த்துக் கொண்டார்கள். இந்தியாவில் இதற்கு முன் எத்தனையோ லெஸ்பியன் படங்கள் வந்திருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்புகூட கன்னடத்தில் ஒரு படம் வந்தது. அதனை பெஸ்ட் ப்ரெண்ட் என்ற பெயரில் தெலுங்கில்கூட டப் செய்து வெளியிட்டார்களே. எந்த அடிப்படையில் உங்கள் படத்தை இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம் என்று கூறலாம் என குதறிவிட்டனர்

தாவூத்துக்கே டாட்டா காட்டியவர் வர்மா. இதற்கா அசருவார். நான் சொன்னது இந்தியாவின் முதல் லெஸ்பியன் படமல்ல, லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படம் என்று பதிலடி கொடுத்துள்ளார்

Also read... வெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே!

வர்மாவின் அட்ராசிட்டி இத்துடன் முடியவில்லை. அடுத்து டேப்லெட் (மாத்திரை) என்ற படம் அவர் பெயரில் வருகிறது. மனிதனின் அதிகபட்ச ஆசை, வயதாகக் கூடாது, மரணம் வரக்கூடாது. இந்த இரண்டையும் ஒரேயொரு மாத்திரை சாதிக்கும் என்றால், மனிதகுலத்தின் கதி என்னாகும்இதுதான் டேப்லெட் திரைப்படத்தின் கதை. கமல் ஆர். என்பவர் இயக்கும் இந்தப் படத்தை, ராம் கோபால் வர்மாவின் டேப்லெட் என்றே விளம்பரம் செய்கின்றனர். ஒருவேளை படத்தின் கதையை வர்மா எழுதியிருக்கலாம்.

சென்ற வருடம் கரோனா என்ற படத்தை வர்மா எடுத்தார். வரும் நாள்களில் கரோனா இரண்டாம் அலையைப் போல் உக்கிரமான படங்களை அவர் எடுக்கலாம். ஓடிடி தளங்கள் புகையாமல் இருக்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: